தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் காலியாக இருக்கக்கூடிய 3,274 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 25 போக்குவரத்து மண்டலங்களில் 3274 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பணிகள் காலியாக உள்ளது என்பது குறித்த விவரத்தையும் வழங்கி இருக்கின்றனர். அவை பின்வருமாறு :-
✓ கும்பகோணம் – 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்
✓ சேலம் – 486 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்
✓ சென்னை – 364 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
✓ திருநெல்வேலி – 362 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
✓ கோவை – 344 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
✓ மதுரை – 322 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
✓ விழுப்புரம் – 322 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
✓ அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் நாளை மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தங்களுடைய விண்ணப்பங்களை போக்குவரத்து துறையின் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இந்த தேர்வானது நேர்காணல் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என மூன்று வழிகளின் கீழ் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.