பிரபல சமையல் கலை நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா முன்வைத்த புகார்கள் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. தற்போது தனது குழந்தைக்குத் தந்தை ரங்கராஜ் தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என ஜாய் கிரிசில்டா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஜாய் கிரிசில்டாவின் அதிரடிப் பதிவு: சமூக வலைதளத்தில் ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் பதிவில், “DNA டெஸ்ட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வந்தாரா எனப் பலரும் மெசேஜ் செய்கிறார்கள். அவர் எப்படி வருவார்? அறிக்கை தான் விடுவார், ஓடி ஒளியத் தான் முடியும். ஆனால், சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. எத்தனை நாள் ஒளிவாரு? நேரம் வரும். ராகா ரங்கராஜுக்கு (குழந்தை) நிச்சயம் நீதி கிடைக்கும்” என மிகவும் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
பின்னணி என்ன? ஜாய் கிரிசில்டா, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் ரகசியத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். இதற்கிடையில் ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ராகா ரங்கராஜ்’ எனப் பெயரிட்டுள்ள அவர், ரங்கராஜ் தான் தந்தை என உரிமை கோருகிறார்.
ரங்கராஜின் தரப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், “இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. ஒருவேளை அறிவியல் பூர்வமாக (DNA Test) அந்தக் குழந்தை என்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையைப் பராமரிக்கத் தயார்” என ஏற்கனவே ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற நடவடிக்கை: சமீபத்தில் இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் கட்டாயமாக கவுன்சிலிங்கில் (Counseling) கலந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், டிஎன்ஏ சோதனைக்கு ரங்கராஜ் இன்னும் வரவில்லை என்பதே ஜாயின் தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது




