இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து நாம நம்மக்கு நடந்த விஷயத்தை வைத்து யோசிச்சுட்டே இருக்கோம். ஆனால் சீதா ஓட வாழ்க்கைய பத்தி யோசிக்கலையே. சீதாவோட ஆசையை பத்தியும் யோசிக்கலையே. மீனாவும் எவ்வளவோ சொன்னா நம்ம தான் அவள் பேச்சை கேக்க வில்லை என்று வருத்தப்படுகிறார் முத்து. இந்த புறம் மீனா சோகமாக உட்கார்ந்து இருக்க, அண்ணாமலை வந்து ஏம்மா சோகமா இருக்க என்று கேட்க ஒன்னும் இல்ல மாமா என்று கூறி விடுகிறார். அப்புறம் எனக்கு தெரியும் நீ ஏன் சோகமாக இருக்க என்று சீதா கல்யாணம் பத்தி கவலைப் படுற என்று கூறுகிறார்.
முத்து முதல்ல அடம் பிடிப்போமா அப்புறம் அவனை யோசிச்சு நல்ல முடிவா எடுப்பான். நான் அவனிடம் பேசுகிறேன் என்று கூறுகிறார். விஜயா உடனே குறுக்கே வந்து பேசாம உன் தங்கச்சி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லு என்று சொல்ல, அண்ணாமலை அதெல்லாம் மீனா சீதா நல்ல பொண்ணுங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க என்று கூறுகிறார். மீனா சங்கட்டப்பட, இவள் தானே ரவி ஸ்ருதிய கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி வச்சாள். அப்போது தெரியலையாமா என்று விஜயா கேட்க, ஸ்ருதி எங்க அம்மா, அப்பா சம்மதிச்சிருந்தால் ஏன் நாங்க இப்படி பண்றோம் என்று வித்யாவிடம் கூறுகிறார்.
உடனே ஸ்ருதி பேசாம உங்க தங்கச்சியா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க சொல்லுங்க என்று சொல்ல, அப்புறமா சம்மதம் வாங்கிய பின் எல்லாரும் மத்தியிலும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறாள். அண்ணாமலை உடனே இதெல்லாம் தப்புமா. அப்படியெல்லாம் பண்ணா அவங்க மேல அவங்க குடும்பத்துக்கு இருக்கிற மரியாதை நம்பிக்கை எல்லாம் போயிடும் என்று அறிவுரை கூறுகிறார். இதனால் மீனா மேலும் சங்கட்டத்தில் அழுகிறார்.
முத்து ஒரு பட்டு புடவையை எடுத்துக் கொண்டு வந்து சீதா இந்தா இதை நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வர்றப்போ கட்டிக்கோ என்று கொடுக்கிறார். சீதா தயங்க, நீ எதுவும் பேசாத நீ கேட்ட மாதிரி தான் தனியா பையன் கவர்மெண்ட் மாப்பிள்ளை என்று கூறுகிறார். சீதா மாமா என்று ஏதோ சொல்ல முற்படும்போது, ஆனா மாப்பிள்ளை வீட்டை நீ தான் வரச் சொன்னனும் என்று கூறுகிறார். என்னடான்னு கேக்கல அருண் வீட்டில் நாளைக்கு பெண் பார்க்க வர சொல்லு என்று கூறியவுடன் உற்சாகத்தில் குடும்பமே சந்தோஷம் அடைகிறார்கள். முத்து கூறிவிட்டு வெளியே சென்ற பிறகு சந்திரா மீனாவிற்கு போன் செய்து எல்லாவற்றையும் கூறுகிறார். மீனா சந்தோஷம் தாளாமல் நடந்தவற்றை அண்ணாமலையிடம் கூறுகிறார். அண்ணாமலைக்கு நான் தான் சொன்னேன் இல்லம்மா அவன் முன்கோபக்காரன் ஆனால் எடுத்து சொன்னோம்னா நல்லது தான் செய்வான் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.