இன்றைய எபிசோடு இன் ஆரம்பத்தில், முத்து வீட்டுக்குள் வர, அருண் சீதா விஷயத்துல இப்பதான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க என்று எல்லோரும் முத்துவை பாராட்டுகிறார்கள். உடனே விஜயா இன்னும் கொஞ்ச நாள் சம்மதிக்காமல் இருந்திருந்தால் அவளே ஓடிப் போய் கல்யாணம் பண்ணி இருப்பாள் என்று கூற, முத்து உடனே சீதா ஒன்னும் உங்க பையன் ஓடுகாலி மாதிரி கிடையாது என்று கூறுகிறான். இதைக் கண்டு மீனாவின் முகம் மாறுகிறது. இருந்தாலும் நாளைக்கு நீங்க வருவீங்க தானே என்று தயக்கத்தோடு முத்துவை கேட்கிறார்.
மாப்பிள்ளை எனக்கு தான் பிடிக்கல உங்க எல்லாத்துக்கும் புடிச்சிருக்கு நான் வந்து தான் ஆகணும் என்று கூறி நான் வருவதாக கூறுகிறார். உடனே சந்தோஷத்தில் அண்ணாமலையை வந்துருங்க மாமா என்று கூப்பிட நான் இல்லாம எப்படி மா என்று அவரும் கூறுகிறார். விஜயாவையும் வாங்க அத்தை என்று கூப்பிட, நான்லாம் வர முடியாது என்று மறுத்து விடுகிறார்.
ரோகினி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் மனோஜ் போன் செய்து தான் ஷோரூமிற்க்கு வருவதாக கூறுகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் முருகனை பார்த்து இந்தாங்க உங்க ஒரு லட்ச ரூபாய் என்று கொடுத்துவிட்டு தேங்க்ஸ்ங்க. வித்யா கிட்டயும் சொல்லிடுங்க என்று கூறுகிறார்.
உங்க பிரண்டு தானே நீங்களே சொல்ல வேண்டியது தானே என்று கேட்க, அதெல்லாம் முன்ன மாதிரி இல்லங்க. இந்த ஊருக்கு வந்தப்ப அவளும் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காள். நானும் அவளுக்கு நிறைய பண்ணியிருக்கேன். ஆனா இப்ப பண்றத பத்தி எல்லாம் யாருங்க யோசிக்கிறா என்று கூறுகிறாள். அதோடு முருகனும் பணத்தை வாங்கி விட்டு பேசாமல் சென்று விடுகிறான்.
இங்கிட்டு தடல் புடலாக, சீதா வீட்டில் பெண் பார்க்கும் விழா நடக்கிறது. எல்லோரும் அண்ணாமலை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க, அண்ணாமலை இங்க பெண்பார்க்கும் விழா நடக்கிறது. என்ன பத்தி பேசுறதுக்காக யாரும் வரலை என்று கூறிவிட்டு, எங்கனால முடிஞ்சது பத்து பவுன் நாங்க பொண்ணுக்கு போறோம் என்று கூறுகிறார். அருணின் அம்மாவிடம் நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க என்று கேட்கிறார். எங்க வீட்டு மகாலட்சுமி எங்க வீட்டுக்கு வந்தா போதும் என்று அவர் சொல்லி வருகிறார்.
அதன் பின்னர் அருனிடம் கேட்கிறார். எனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம். ஆனா ஒரே ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு. நான் போலீசில் வேலை செய்கிறேன். எனக்கு ப்ரமோஷன் கிடைப்பதாக இருக்கிறது. அதனால் கல்யாணத்தின் போது யாரும் குடிக்க கூடாது என்று நேக்காக முத்துவை குத்தி காட்டுகிறார். உடனே நம்ம முத்துவும் அசால்டாக நாம பத்திரிகை வைக்கும் போது யாரும் குடிக்கக்கூடாது கல்யாணத்துக்கு வரும்போது என்று சொல்லியா வைக்க முடியும் என்று நக்கல் அடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.