இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துமிடம் பணத்திற்கு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்ட அண்ணாமலை அரேஞ்ச் பண்ணிக்கலாம் பா என்று கூறுகிறார். மீனாவும் நான் கொஞ்சம் சேவிங்ஸ் வச்சிருக்கேன் என்று கூறுகிறார். அண்ணாமலை தனது பென்ஷன் காசியில் இருந்து 50 ஆயிரத்தை எடுத்துட்டு வந்து மீனாவின் கையில் கொடுக்க விஜயா சைடுல நின்று புலம்புகிறார். எதுக்கு இவ்வளவு பணம் கொடுக்குறீங்க என்று கேட்க, இது என் பென்ஷன் பணம்! இத பத்தி நீ எதுக்கு கேக்குற என்று வாய் அடைத்து விடுகிறார். ஸ்ருதி ரவியிடம் கொஞ்ச நாளைக்கு ரெஸ்டாரன்ட் வேலையே தள்ளி வைத்துவிட்டு, சீதா கல்யாணத்தை பார்க்க போறேன்.
மீனா நம்ம கல்யாணத்துக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்காங்க என்று கூற ரவியும் நானும் அதைத்தான் நினைத்தேன் என்று கூறுகிறார். ரவி உடனே கல்யாண சமையல் செலவை தான் ஏற்பதாக சொல்ல ஸ்ருதி அது முடியாது என்று மறுக்கிறாள். மறுத்தும் ரவி, அண்ணாமலையிடம் தனது விருப்பத்தை சொல்ல மீண்டும் மறுக்கிறார் ஸ்ருதி. சாப்பாடு செலவு மட்டும் அல்ல அதோடு சீதாவுக்கு மூணு பவுன் நகை செய்கிறேன் என்று சொல்ல விஜயா வாயை பிளக்கிறார். எவ வீட்டு கல்யாணத்துக்கோ இங்கே செலவு பண்ணிட்டு இருக்கீங்க என்று வைத்தெரிச்சலை கொட்டுகிறார்.
இதனைக் கண்டு கடுப்பாகும் ரோகினி, ஸ்ருதியிடம் அடுப்படியில் நான் கேட்கும் போது பணம் இல்லை என்று சொன்னீங்க என்று கேட்கிறார். நீங்கதான் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் ஒரே மாதிரி பார்ப்பீங்கன்னு நினைச்சேன் என்று கூறுகிறார். ஸ்ருதி அதற்கு மீனா என்னிடம் பணம் கேட்கவே இல்லை. மீனா ஒரு போதும் காசுக்கு எதிர் பார்த்தது கிடையாது. நீங்க நீங்க செஞ்ச தப்பா மறைக்கிறதுக்கு ஆன்ட்டிக்கு ஐஸ் வைக்க பணம் கேட்டீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீனா அங்கிருந்து வந்து ஸ்ருதி நகையெல்லாம் வேண்டாம் என்று கூறுகிறார். உடனே நக்கலாக ரோகினியை ஸ்ருதி பார்க்கிறார்.
சட்டென்று ரூமுக்கு வந்து விடுகிறார் ரோகினி. படுத்துக் கொண்டிருக்கும் போது பிஏவிடம் இருந்து கால் வருகிறது. போனில் அவர் நீ என்னை பார்த்து பயப்படவே இல்லை. நான் உன் மச்சானிடம் உனக்கு கல்யாணம் ஆகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது என்று கூறி விடுகிறேன் என்று சொல்ல பதறி போய் ரோகினி அப்படியெல்லாம் செஞ்சிராத. எனக்கு இப்போதைக்கு டைம் கொடு என்று சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.