இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பி ஏ சொல்வதை கேட்டு பயத்திலேயே தூங்கும் ரோகினி தூக்கத்தில் கத்துகிறார். எல்லாரும் ஓடி வந்து பார்க்க விஜயா இவரை யாரை நிம்மதியா தூங்க மாட்டியா என்று திட்டி விட்டு செல்கிறார். பின்ன தூக்கமா இல்லாமல் தவிக்கும் நேரத்தில் பிஏவிற்கு ஃபோன் செய்து யாரும் இல்லாத நேரத்தில் சொல்றேன் வந்து நகை எடுத்துட்டு போ என்று கூறுகிறார்.
உடனே அந்த பக்கம் சித்தியும் இது நல்லா யோசனை தான். நகை காணாமல் போனால் சத்யாவும் என்னிடம் வேலைக்கு வருவான் என்று கணக்கு போட்டு ஓகே சொல்கிறார். காலையில எழுந்து விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லித்தர அங்கு உள்ள ரதி தண்ணீர் குடிக்க செல்லும்போது பின் தொடர்ந்து அவருடைய காதலனும் செல்கிறார். அந்நேரத்தில் முத்து சீதா கல்யாணத்திற்கு பார்வதியை கூப்பிட வர, முத்து குறித்து விமர்சியாக பேசுகிறார் பார்வதி.
கடுப்பான விஜயா பார்வதி திட்டுகிறார். அதைக் கண்டு கொள்ளாமல் உடனே உள்ளே சென்று பத்தாயிரம் பணம் எடுத்து செலவுக்கு வச்சுக்க என்று முத்துவிடம் கொடுக்க, விஜயா நீ என்ன நிறைய வச்சிருக்கியா என்று கடுப்பாகிறாள். முத்துவும் நீங்களே மகன் இல்லாம தனியா இருக்கீங்க வேணாமா என்று சொல்ல அவன் இல்லனாலும் அவன் பணம் அனுப்பிடுவான். இதை கண்டிப்பா கல்யாண செலவுக்கு வச்சுக்க என்று வற்புறுத்தி கொடுத்து விடுகிறார்.
வெளியே வரும்போது ரூமில் சத்தம் கேட்பதை கண்டு திறந்து பார்க்கும் முத்து காதல் ஜோடிகள் உள்ளே குலாவி கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். அவர்களை வெளியே வர சொல்லிவிட்டு, டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது இந்த இடத்தை தவிர மத்த ரூம் போட்டி வைங்க என்று பார்வதியிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.
மீனா வெளியே வேலையாக கிளம்பும் போது ரோகிணியும் கிளம்புவதாக வெளியே வந்து அவர் சாவி வைக்கும் இடத்தை பார்த்து கொள்கிறார். போன் போட்டு பி ஏ வை வர சொல்ல, அவர் வந்து நகையை திருடிவிட்டு செல்லும்போது மனோஜ் வந்து என் வீட்டுக்குள் நீ யாருடா என்று அடிக்கச் செல்கிறார். மனோஜின் முகத்தில் அவர் மாட்டி வந்த முகமூடியை போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். வெளியே வரும்போது மீனா ரோகிணி வந்துவிட அவர்களிடம் அடி வாங்குகிறார். முகமூடி அணிந்திருந்ததால் மனோஜை பிடித்து சுருதி அடித்துக் கொண்டிருக்கிறாள். பி ஏ தப்பித்து ஓடி விடுகிறான். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.