ஜூலை 5 தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நிலவரம்!! ஏற்றம் தான்!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னால் 10 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும் தற்சமயம் அதன் விலை குறைந்து வந்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் ஒரு கிராமின் விலை ₹.9,883 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9873 ஆக இருந்தது. நேற்றைய விலையோட இன்று பத்து ரூபாய் கூடுதலாக கிராமிற்கு விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79,064 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு 80 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ₹. 9,060 ஆக இன்று விற்கப்படுகிறது.

 

சுத்த தங்கத்தை போல ஆபரணத் தங்கமும் நேற்றைய விலையுடன் கிராமிற்கு பத்து ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹72,480 ஆக இன்று விற்கப்படுகிறது. இதுவும் நேற்றே விலையை விட பவுனுக்கு 80 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியின் நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இன்று அடையவில்லை. வெள்ளி ஒரு கிராமின் விலை 120 ஆகவும், ஒரு கிலோவின் விலை 1,20,000 ரூபாயாகவும் இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் விலையானது இன்று சற்று ஏற்றமடைந்து உள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹.3823 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 13 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram