கடந்த இரண்டு நாட்கள் 10, 11 ரூபாய் விலை குறைந்து விட்டு இன்று தங்கமானது கிராமிற்கு 82 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,840. இதன் நேற்றைய விலை 9,758. கிட்டத்தட்ட கிராமிற்கு 82 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுனின் விலை ₹.78,720. இது நேற்றைய விலையை விட கிட்டத்தட்ட 656 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. கூடிய விரைவில் இதன் விலை 10 ஆயிரத்து தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,020. இதுவும் நேற்றைய விலை விட ரூபாய் 75 கூடுதலாக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையானது ரூபாய் 8,945. இதன் ஒரு பவுன் விலை ₹72,160. இது நேற்றைய விலை விட ரூபாய் 600 கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஆனது இன்றைய மார்க்கெட்டில் நேற்றைய விலை கம்பேர் செய்கையில், எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. வெள்ளி ஒரு கிராமின் விலை ₹ 119. ஒரு கிலோவின் விலை ஒரு லட்சத்து 19 ஆயிரம் ஆக விற்கப்படுகிறது. பிளாட்டினமும் தொடர்ந்து ஏற்முமாக உள்ளது. இதன் ஒரு கிராமின் விலை ரூபாய் 3,365. இது நேற்றைய விலையை விட ரூபாய் 17 கூடுதலாக விற்கப்படுகிறது.





