இன்றைய தங்கம் ஒரு கிராமின் விலையானது அடுத்த கட்ட உச்சத்தை தொட்டுள்ளது. விரைவில் கிராம் பத்தாயிரத்தை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, ரூபாய் 9,928. இதன் நேற்றைய விலை ரூபாய் 9,840. நேற்றைய விலையை விட 88 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ₹79,424. நேற்றைய விலையை விட சவரனுக்கு 704 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,100. இது கிராமிற்கு நேற்றைய விலையோட 80 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹9,020. ஒரு பவுன் விலை ₹. 72,800. இது நேற்றைய விலையை விட பவுனிற்கு ரூபாய் 640 கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 10 பைசா குறைந்து இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு கிராமின் விலை ₹ 118.90. கிலோவிற்கு நூறு ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18,900 ரூபாயாக விற்கப்படுகிறது. மாறாக பிளாட்டிடத்தின் விலை நேற்றைய விலையை விட எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. இதன் ஒரு கிராமின் விலை ₹3,365 ஆக இன்று விற்கப்படுகிறது.





