ஜூன் 18 தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நிலவரம்!! இன்றும் ஏறுமுகம் தான்!!

தங்கம் விலை ஆனது ஒரு கிராமின் விலை 10,000 தாண்டிய நிலையில் இன்றைய மார்க்கெட் சற்று ஏற்றமாகத்தான் அமைந்துள்ளது. தங்கம் விலை ஏறி இருப்பினும் பலர் அதனை டிஜி கோல்ட் ஆப்சன் மூலம் சிறுக சிறுக சேமிக்க முன் வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 10,091. இதன் நேற்றைய விலை ரூபாய் 10,037. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 54 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 80,728. இதன் நேற்றைய விலையை விட பவுனிற்கு 432 ரூபாய் அதிகமாக இன்று விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலையைப் போலையே 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் அதிகரித்து இன்று மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,250. இதன் நேற்றைய விலை ₹. 9,200. ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹.74,000 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை விட பவுனிற்கு 400 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ₹ 121 ஆக இன்று விற்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு ₹1000 கூடுதலாக இன்று மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹. 3,509 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூபாய் 78 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை ரூபாய் 3431 ஆக இருந்தது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram