ஜூன் 20 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! குறைந்தாலே பயமா தான் இருக்கு!!

நாளுக்கு நாள் போர்களின் காரணமாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு ஏறிக்கொண்டே வருகின்றது. எப்போவாவது மிதமான தாழ்வு நிலையும் ஏற்படும். இன்றைய நிலவரத்திலும் சற்று தாழ்வு ஏற்பட்டுள்ளது. அடுத்து இரண்டு மடங்காக இதன் விலை ஏறிவிடும் என்ற கணிப்பும் உள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 10, 048 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றே விலை ₹ 10,108. நேற்றைய விலை விட 60 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 80,384 ஆக உள்ளது. இது நேற்றே விலையை விட பவுனிற்கு 480 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. சனி மாமா உள்ள அனலைசிங் படி, தங்கம் விலை குறைந்தாலே ஒருபுறம் பயமாகத்தான் உள்ளது. அடுத்து எவ்வளவு ஏறுமோ என்ற கோணத்தில் தான் யோசிக்க தோன்றுகிறது.

22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,210. நேற்றைய விலை ரூபாய் 9265. கிட்டத்தட்ட 55 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு சவரனின் விலை ரூபாய் 73,680 ஆக விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட 440 ரூபாய் பவுன் இருக்கு குறைக்கப்பட்டுள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் கணிசமான சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ₹ 120 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட இரண்டு ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. பிளாட்டினத்தின் விலைத்தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, இன்று குறைந்துள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹3,587. இது நேற்றைய விலையை விட ரூபாய் 147 குறைவாக இன்று விற்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram