தங்கத்தின் விலை ஆனது சற்று ஏற்றமாகவே இன்று காணப்படுகிறது. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 10,075 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 10,048 ஆக இருந்தது. நேற்றைய விலையை விட 27 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதனை ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 80,600 ஆக இன்று உள்ளது. இது நேற்றைய விலை விட 216 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹. 80 ஆயிரத்து 384 ஆக இருந்தது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,235 ஆக விற்கப்படுகின்றது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9,210. இன்று 25 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. நேற்றைய இறங்கிய விலையும் இன்றைய விலையும் கிட்டதட்ட சராசரியாக உள்ளது.
இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 73,880 ஆக இன்று விற்கப்படுகிறது. நேற்றைய விலை விட 200 ரூபாய் பவுனிற்கு கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 120 ஆக இன்று விற்கப்படுகிறது. இவற்றிற்கு மாறாக பிளாட்டினம் சற்று இறக்கத்துடன் இன்று காரணப்படுகிறது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை நேற்றைய விலையை விட 63 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. இதன் ஒரு கிராமின் விலை ₹. 3524 ஆக இன்று விற்கப்படுகிறது.





