தங்கத்தின் விலை நாளுக்கு நாள் இறக்கத்தின் விகிதத்தை விட ஏறத்தின் விகிதம் அதிகமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஆனது மிக கணிசமான சரிவை சந்தித்துள்ளது. அதன்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 10,069 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹10,075 ஆக இருந்தது. நேற்றைய விலையை விட இன்றைய விலை கிராமிற்கு ஆறு ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 80,552. இது நேற்றைய விலையை விட 48 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,230 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹9,235. நேற்றைய விலையை விட இன்று ஐந்து ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது.
இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 73,840 ஆக இன்று உள்ளது. இது நேற்றைய விலையை விட 40 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் சிறிய மாற்றத்தை இன்று அடைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை இன்று ரூபாய் 119.90 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பத்து பைசா குறைவாக இன்று விற்கப்படுகிறது. கிலோவிற்கு நூறு ரூபாய் வித்தியாசத்தில் இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹. 3539 ஆக இன்று விற்கப்படுகிறது. இது மற்றவைக்கு நேர் மாறாக சற்று ஏற்றதோடு இன்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிராமிற்கு 15 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது.





