ஜூன் 28 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! ஆச்சரியம் தான்!!

தங்கம் விலை இன்றும் மிதமான சரிவை சந்தித்துள்ளது. இது உண்மையிலேயே ஆச்சரியம் தான். ஏனென்றால் தங்கத்தின் விலை ஐந்தாவது நாளாக இன்று சரிவை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,742 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9802 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட 60 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 77 ஆயிரத்து 936 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட சவரனிற்கு 480 குறைவாக இன்று விற்கப்படுகிறது. சுத்த தங்கத்தை போல் ஆபரண தங்கத்தின் விலையும் மிதமான சரிவை கண்டுள்ளது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 8930 ஆக இன்று விற்கப்படுகிறது.

 

இதன் நேற்றைய விலை ரூபாய் 8,985 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட 55 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹71,440 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு 440 குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு நேற்றை போல் இன்றும் சரிவு கண்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை இன்று ரூபாய் 117.80 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 10 பைசா குறைவாக இன்று விற்கப்படுகிறது. கிலோவிற்கு நேற்றைய விலையை விட 100 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் இவற்றிற்கு நேர் மாறாக எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. பிளாட்டினத்தின் ஒரு கிராமின் விலை ₹. 3822 ஆக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram