தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு வளர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கூடிய விரைவில் கிராம் ஆனது பத்தாயிரத்து தாண்டும் என்ற கணிப்பு பேச்சும் மக்களிடத்திலே அதிகம் காணப்படுகின்றது. இன்றைய நிலவரத்தின்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,959. இது நேற்றைய மார்க்கெட் விலையை விட ஒரு ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ₹. 79,672. இது நேற்றைய விலையை விட கணிசமாக குறைந்துள்ளது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,129. இதுவும் நேற்றைய விலையை விட கிராமிற்கு ஒரு ரூபாய் குறைவில் விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுன் விலை ₹.73,032. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் நாளுக்கு நாள் உயர்வை நோக்கி பயணிக்கின்றது. இதன் ஒரு கிராமின் விலை இன்றைய நிலவரப்படி, ரூபாய் 118.10 ஆக விற்கப்படுகின்றது. இது நேற்றைய விலையை விட பத்து பைசா கூடுதலாக விற்கப்படுகிறது. பத்து பைசா என்பது பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், கிலோவிற்கு நேற்றைய விலையை விட 100 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.