எபிசோட் தொடக்கத்தில் அண்ணாமலையிடம் முத்து அருணை பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டு வர மீனா குறுக்கிட்டு, அவர்தான் எனக்கு பணம் வேணும் என்று சொல்லவும் எடுத்துட்டு வந்து கொடுத்தாரு என்று கூறுகிறார். கடுப்பான முத்து அவன்கிட்ட பணம் வாங்கி தான் இங்க குடுத்தியா. அவன் கிட்ட இருக்குன்னு காட்டுறானா! அவன் பணத்தை தான் நான் சிந்தாமணி வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்து கொடுத்தேனா! என்று மீனாவை சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.
அப்பா என் பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருக்க சொல்லுப்பா! என்று கத்தி கூச்சலிட்டு சென்று விடுகிறார். அண்ணாமலை சற்று குழப்பத்தோடு, மீனா மீண்டும் அருணை பத்தி நன்றாக விசாரி. நல்ல பையனாக இருந்தால் நாமளே கல்யாணம் செய்து வைத்துவிடலாம். நான் அவனிடம் எடுத்து சொல்லுகிறேன் என்று கூறுகிறார்.
மறுபுறம் ஸ்ருதி, ரெஸ்டாரன்ட் டிசைன் பண்றதுக்கு ஒரு நம்பரை கூப்பிட்டு வருகிறார். ரவி உள்ளே வேலை பார்த்துக் கொண்டு இருக்க அவர், ரவியை வெளியே அழைக்கிறார். ஒருமுறை கூட்டு ரவி வராத போது, மீண்டும் அழைக்கிறார் ஸ்ருதி. வெளியே வந்து வேலை பார்த்துட்டு இருக்கும்போது கூப்பிடுற என்று கேள்வி எழுப்புகிறார்.
இவங்கதான் ரெஸ்டாரன்ட் டிசைனர் இவங்க கிட்ட கிச்சன் எப்படி இருக்கணும்னு சொல்லு என்று கூறுகிறாள். ரவி ஸ்ருதியை தனியாக அழைத்து நான் இதெல்லாம் வேணாம்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் சுருதி என்று கூறிவிட்டு, அந்த பர்சனிடம் அவங்களை கிச்சன் மாடல் எல்லாத்தையும் சொல்லுவாங்க என்று கூறிவிட்டு செல்கிறார்.
இதனை ஓரமாக நின்று கவனித்த நீத்தூ, என்ன ஸ்ருதி ரவி உங்க பேச்சைக் கேட்க மாட்டாரா! நான் வேணா சொல்லவா! என்று நக்கலடிக்கிறார். என் புருஷனை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று ஸ்ருதி சொல்லிவிட்டு செல்கிறாள். மற்றொருபுறம் ரோகிணி, விஜயாவிடம் இன்றைய ஒரு நாள் லாபம் என்று 80 ஆயிரத்தை கையில் கொடுக்கிறாள். ஒரு நாளில் இவ்வளவு எப்படி என்று மனோஜ் கேள்வி கேட்க, ரோகினி எஸ்சேஞ்ச் ஆஃபர் போட்ட இரண்டு மணி நேரத்தில் கடைக்கு கூட்டம் அள்ளியது.
எல்லாரும் கொண்டு வந்த பழைய பொருளையும் ஐயாயிரம் கொடுத்து வாங்கிக் கொண்டு, நம்ம புது பொருளை கூடுதல் விலை வைத்து விற்று விட்டேன் என்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை, இப்படி எல்லாம் செய்யக்கூடாது மா. உண்மையா இருக்கிற காசு தான் உடம்புல ஒட்டும். நேர்மையா சம்பாதிக்கணுமா என்று அட்வைஸ் செய்துவிட்டு சென்று விடுகிறார். உடனே விஜயா அவர் கெடக்காரு! அவர் எப்படித்தான் சொல்லுவாரு! என்று கூறுகிறாள். ரோகினி நாளிலிருந்து மனோஜ் என்கூட கடைக்கு அனுப்புங்க என்று கேட்க, நான் யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் விஜயா.
முத்து வெளியே சவாரிக்கு செல்ல ஒரு பெண் பதறி அடித்துக் கொண்டு தன் மகள் விஷம் குடித்து விட்டாள் காப்பாற்றுப்பா என்று வலி மறைக்கிறாள். உடனே முத்துவும் அந்த பெண்ணை பார்க்க உள்ளே செல்கிறார். ஆம்புலன்ஸ்க்கு சொன்னீங்களா என்று கேட்க வரலப்பா சொன்னேன் என்று அழுது கொண்டே கூறுகிறாள். நம்ம வண்டியில கூட்டிட்டு போயிடுவோம் என்று முத்து அந்தப் பெண்ணை ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்கிறார்.