பொதுவாக தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன் ஆகியவை வங்கிகளின் வட்டி விகிதங்களை அடிப்படையில் வைத்து தான் கணக்கிடப்படுகின்றன. இந்த வங்கிகளின் வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கியின் வட்டியை பொறுத்து அவ்வப்போது மாற்றமடைந்து கொண்டே வரும். ரிசர்வ் வங்கி தலைமையகம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவ்வப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த ஆண்டு தொடங்கியது முதல் ரெப்போ வட்டி விகிதமானது கணிசமாக குறைந்து கொண்டே வந்து இருந்தது. கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்குறையும் தலா 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி மாதம் 6.5% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் ஏப்ரல் மாதத்தில் ஆறு சதவீதமாக மாற்றப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தற்சமயம் மீண்டும் ஒரு இறக்கத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவரை ஆறு சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்சமயம் 0.5% தளர்வடைந்து 5.5% ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனை இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வங்கிகளின் வட்டி விகிதமும் கணிசமாக குறையும் என்பதால் பலரும் இதனை வரவேற்று வருகின்றனர். ரெப்போ வட்டி விகிதங்களை பொறுத்து வங்கிகளின் தனிநபர் குரிய கடனுக்கான வட்டி விகிதங்கள் இதன் மூலம் குறையும்.