சர்ச்சை பேச்சுக்களின் ராணியாக மாறும் ஜோதிகா!! சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன!!

Jyothika becomes the queen of controversial talks

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயின் ஆக இணைந்தவர்கள் தான் சூர்யா ஜோதிகா அதனைத் தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், பேரழகன் என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிப்பு அந்த படங்களுக்கு வெற்றி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தங்களுடைய காதலை வீட்டில் தெரிவித்து திருமணமும் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் தற்பொழுது மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாகவும் தன் பிள்ளைகளுடைய படிப்புகளும் மும்பையில் தான் என்பது போல தெரிவித்து இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையிலிருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க தொடங்கினர். மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை சினிமா துறையில் நிலைநாட்டி கொண்ட ஜோதிகா அவர்கள் மும்பைக்கு சென்ற பின் ஹிந்தி மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து அதன் பிரபோஷனில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ் சினிமா குறித்து மிகவும் கேவலமாக பேசி இருப்பது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவில் பெண்களை டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வதாகவும் ஆனால் ஹிந்தி மொழியில் பெண்களுக்கான கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதாகவும் பேசி இருக்கிறார்.

இவருடைய இந்த திமிரான பேச்சு தமிழ் ரசிகர்களை கோபமடைய செய்ததுடன் இவர் வளர்ந்தது தமிழ் சினிமா என்பதை மறந்துவிட்டு இவர் பேசுகிறார் என்று ஆதங்கங்களையும் கொட்டி வருகின்றனர். ஜோதிகா அவர்களின் இந்த திமிரான பேச்சுக்கு சூர்யா அவர்கள் எந்த வித பதிலும் அல்லது எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது ஜோதிகாவின் அனைத்து முடிவுகளுக்கும் சூர்யா அமைதியாக ஒத்துக் கொள்வது போல் அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram