கச்சத்தீவு இந்தியர்களுக்கு சொந்தம்!! வலியுறுத்த போவதாக அர்ஜுன் சம்பத் திட்டவட்டம்!!

தஞ்சாவூரில் சாரங்கபாணிப்பேட்டையில் உள்ள 400 வருட பழமையான காசி விசுவநாதர் கோயிலுக்கு அந்த கிராமத்து மக்கள் இணைந்து கோயிலை தூய்மைப்படுத்தி புதுமைப்படுத்தியுள்ளனர். இதனைப் பார்வையிட்ட ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த கோயில் அறநிலைத்துறை கீழ் வந்தாலும், இதற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. இருப்பினும் கிராமத்து மக்கள் இணைந்து இக்கோயில் பணிகளை ஏற்று திறம்பட புதுமைப்படுத்தியுள்ளீர்கள். இது முற்றிலும் பாராட்டக்கூடிய ஒரு பெரிய விஷயம்.

 

இதே ஊரில் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் யாரோ தெரியாதவர்கள் கேமரா பொருத்தி அங்கு குளிக்க வரும் குழந்தைகள் பெண்களை இடையூறு கொடுத்து வருகின்றனர். அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 1972 ஆம் ஆண்டு திமுகவினர் இணைந்து கோயில் முன்பாக ஈவேரா சிலையை வைத்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்துக்கள் நம்பிக்கையை உருகுலைக்கும் வாசகங்களையும் அதில் எழுதியுள்ளனர். அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஹிந்துக்களின் தரப்பில் இருந்து வைக்கப்பட்டு வருகின்றது. அவரவர்கள் நம்பிக்கையை உடைக்கும் செயல்களில் ஈடுபடாமல் மக்களுக்கு உரிய பணியை செய்தாலே போதும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கச்சத்தீவு குறித்து அவர் பேசுகையில், கச்சத்தீவு இந்தியர்களுக்கு சொந்தமானது. அதை வலியுறுத்தும் வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் சுதந்திர தினம் அடுத்த ஆண்டு குடியரசு தினம் ஆகியவற்றிற்கு இந்திய கொடி கச்சத்தீவில் பறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram