கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா!! ஆள் எஸ்கேப்பா!!

தற்போது வைரலாக பரவி வரும் போதை பொருள் கேஸ் முதலில் ஸ்ரீ காந்த் பிடிபட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து மற்றொரு ஹீரோயினுக்கும், கழுகு பட ஹீரோ கிருஷ்ணா விற்கும் கொக்கைன் பழக்கம் உள்ளதாக தகவல் கிடைத்திருந்தது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தின் மொபைலின் மூலம் அவர் இன்னும் பல மோசடி விஷயங்களில் ஈடுபட்டு வந்திருப்பது உறுதியாகப்பட்டுள்ளது. மேலும் நடிகை நடிகையருக்கு கொக்கைன் புழக்கத்தை ஏற்படுத்திய அதன் பிறகு அவர்களை மிரட்டுவது போன்ற செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். போதைப் புழக்கம் மட்டுமல்லாது பண மோசடி, திருட்டு ஆகியவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவிற்கு போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே ஸ்ரீகாந்த் சிக்கி அவருக்கு விசாரணை மேற்கொண்டு வருவதையும், அவருக்கு ரத்த பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதையும் அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதையும் நினைத்து பயந்து கிருஷ்ணா போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவு ஆகியுள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை ஐந்து தனி படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். அவரைப் பற்றிய தகவல் வெளியான நிலையில், அவர் இப்படி தலைமறைவாகி இருப்பது மேலும் அவருடைய தவறை உறுதி செய்வது போல் ஆகிறது என்று தகவல்கள் வெளியாகின்றன. மேலும் போலீசாரும் அவரை தேடும் பணியை தீவிரப் படுத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்களை புழங்குவதற்கான சப்ளையரையும் பெங்களூருவில் போலீசார் தேடி வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram