நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய குருநாதரான பாலச்சந்தர் அவர்களை தன்னுடன் ஒரு படத்தில் ஆவது நடிக்க வைத்து விடனும் என்ற கனவை நீண்ட நாட்களாக சுமந்து கொண்டு இருக்கிறார்.
அப்படி ஒரு தருணத்தில் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் பாலச்சந்தர் அவர்களை நடிப்பதற்காக கேட்ட பொழுது அவரை திரைப்படத்தில் தனக்கு நடிக்க விருப்பமில்லை என்பதை தெரிவித்ததோடு மட்டுமல்லாது சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று விட்டாராம். காரணம் இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம். நாகேஷ் அவர்களின் கதாபாத்திரத்தில் பாலச்சந்தர் அவர்களை நடிக்க வைப்பதற்காக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதன் பின்பு நடிகர் கமலஹாசன் அவர்களின் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிப்பதற்காக மீண்டும் ஒருமுறை பாலச்சந்தரிடம் கேட்டபொழுது அவர் திரைப்படத்திற்கு உடனடியாக ஒத்துக் கொண்டாராம் இதற்கும் காரணம் கதாபாத்திரம் தான். உத்தம வில்லன் திரைப்படத்தில் பாலசுந்தர் அவர்களுடைய கதாபாத்திரமானது இயக்குனர் கதாபாத்திரம். தன் வாழ்வின் நடையோடு பொருந்தக்கூடிய கதாபாத்திரம் என்பதால் அதனை அவர் ஏற்றுக்கொண்டாராம்.
இந்த ஒரு திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் அவர்களின் கனவு நிஜமாக மாறியதோடு பாலச்சந்தர் அவர்களுக்கும் இத்திரைப்படம் தான் கடைசி திரைப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.