மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, முகமது அப்துல்லா, சண்முகம், அன்புமணி ராமதாஸ், வில்சன் மற்றும் என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி 6 இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுகவை சேர்ந்த தனபால் மற்றும் இன்ப துரை ஆகியோரும் தேர்வாகினர். திமுக கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றார். தமிழில் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றார்.
கமல்ஹாசனை தொடர்ந்து திமுகவை சேர்ந்த வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றனர். அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோருக்கு வரும் 28ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக இன்று கமல்ஹாசன் உள்ளிட்ட 4 பேர் பதவியேற்றனர். மேலும், அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோருக்கு வரும் 28ஆம் தேதி பதவியேற்கின்றனர்.