சமீபத்தில் நடைபெற்ற தக்லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியது பெரிய பூகம்பமாக வெடித்திருந்தது. கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக கன்னட உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்கக் கோரியும், அவர் அதைக் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கன்னட புரட்சியாளர்கள் தக்லைஃப் படத்தின் பேனர்களை கிழித்து அப்படம் கர்நாடகாவில் வெளிவராது என்று அறிவித்து இருந்தனர்.
அப்படத்தின் தயாரிப்பாளரான இவர் அங்கு வெளியிட வேண்டாம் என்று முடிவு தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், அதற்கென்று தனியே நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று அப்பிரச்சினை குறித்து பேச மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்சமயம் திமுகவுடன் கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் முதலமைச்சர் முன்னிலையில் மனு சற்றுமுன் தாக்கல் செய்துள்ளார். ராஜ்யசபா எம்பி காண தேர்தல் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்தத் தேர்தலில் இவருடன் ஆறு பேர் இன்று அவரவர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.





