கமல்-மணி கூட்டணியில் தக் லைஃப் !! ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் கிடைத்ததா?

தமிழ் சினிமாவின் பிரமாண்ட கூட்டணியாக எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. ‘நாயகன்’ படத்திற்கு பின் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் சேரும் படம் இது என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எவ்வளவு பூர்த்தி செய்தது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. கமல் நடித்த ரங்கராய சக்திவேல் நாயக்கர், தனது அண்ணன் மாணிக்கம் (நாசர்) மற்றும் கேங்ஸ்டர் மோதல்களில் சிக்கி அவர்களை தப்பிக்க முயலும் கதை. இதில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மற்றும் ராஜ்கமல் நிறுவனம் சார்பான பிரமாண்ட பொருட்செலவு படம் முழுவதும் தென்படும். ஆனால், மணிரத்னத்தின் ஸ்டைலில் கதை மாற்றப்பட்டு கமல் தவிர மற்ற நடிகர்களுக்கு போதிய கதை எழுதி தரப்படாதது ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஓரளவுக்கு வேலை செய்தாலும், அவர் போட்ட பாடல்கள் சில இடங்களில் சரியாக பேசப்பட இல்லை. ரசிகர்கள் எதிர்பார்த்த ‘முத்தமழை’ பாடல் கூட படம் முழுவதும் காணவில்லை.

கமலின் இளமைக்கால காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தாலும், படம் முழுவதும் அவர் ஒரே தூணாக நிற்க, மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக அமைந்தது. சிம்பு கொடுத்த அதிரடி என்ட்ரி, அசோக் செல்வனின் பாத்திரம் போன்றவை சரியாக வேலை செய்யவில்லை. “இந்தியன் 2” தோல்விக்குப் பிறகு கமலுக்கு இது பெரிய கம்பேக் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் கை கொடுக்கவில்லை. பில்டப் பேசி ரசிகர்களை தூண்டியதற்கு இப்படம் பதில் தரவில்லை என்பதே ரசிகர்களின் பொதுப்பேச்சு. ‘தக் லைஃப்’ திரைப்படம் காண்போரை ஒரு பகுதி வசூலுக்கு ஈர்த்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த ‘நாயகன்’ மாதிரி மாஸ் அனுபவத்தை கொடுக்கவில்லை.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram