விஜய் அரசியலை எதிர்ப்பவர்களுக்கு டிக்கெட் எதற்கு? காரைக்காலில் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள்.
காரைக்கால்: நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள நிலையில், காரைக்காலில் டிக்கெட் ஒதுக்கீட்டில் பெரும் குளறுபடி நடப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எம்.எல்.ஏ-க்களுக்கு பிளாக் டிக்கெட்? காரைக்காலில் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்படாமல், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘பிளாக்’கில் விற்கப்படுவதாக முன்னாள் எம்.எல்.ஏ அசனா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அசனாவின் அதிரடி வார்னிங்: இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய்யின் அரசியல் வருகையையும், அவரது கொள்கைகளையும் மேடைகளில் விமர்சிக்கும் சில அரசியல் கட்சிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் அவரது பட டிக்கெட்டுகள் ரகசியமாக வழங்கப்படுவது ஏன்? அவரது அரசியலைப் புறக்கணிப்பவர்களுக்கு, அவரது பட டிக்கெட் மட்டும் வேண்டுமா? ரசிகர்களுக்கு டிக்கெட் முறையாகப் போய்ச் சேரவில்லை என்றால், காரைக்காலில் உள்ள திரையரங்குகளை முற்றுகையிடுவோம்” என எச்சரித்துள்ளார்.
ரசிகர்கள் குஷி – அரசியல்வாதிகள் பீதி: தவெக (TVK) கட்சி தொடங்கிய பிறகு ரிலீஸாகும் முதல் படம் என்பதால், விஜய்யின் பலத்தைக் காட்ட ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்ல இருக்காங்க. இந்தச் சூழலில் அசனா பேசியிருப்பது, காரைக்கால் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டிக்கெட்டுகளை அள்ளித் தருவதைத் தடுத்து, உண்மையான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதே அசனாவின் வாதமாக இருக்கிறது.


