Admk: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கச்சத்தீவு மீட்பு பற்றி தனி தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . இது குறித்து பாஜக உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்கு முழு மனதாக சம்மதம் தெரிவித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசிய பொழுது செல்வி ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது கச்சத்தீவு பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை மற்றும் வாஜ்பாயுடன் கூட்டணியில் இருக்கும் பொழுதும் கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சனையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
இப்பொழுது வந்து கச்சத்தீவை திமுக தான் தாரவாத்து விட்டது என்று குறை கூறிக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சுமத்தினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். மேலும் இது குறித்து பேச எதிர் கட்சி தலைவர் பழனிசாமி உட்பட்டபோது சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர் பேச அனுமதி அளிக்காமல் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வரும் காரணத்தினால் திமுக அரசு மீனவர்களின் வாக்குகளை சேகரிக்கவே கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சனை கையில் எடுத்துள்ளது நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கண்டு கொள்ளாமல் ஐந்தாவது ஆண்டில் ஆறு மாதமே இருக்கும் பட்சத்தில் மீனவர்கள் பிரச்சனையும் கட்சி தீவு பிரச்சனை கையில் எடுத்துள்ளது. மேலும் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாத்து விட்டு தற்பொழுது கபட நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2008ல் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் இல்லாதபோதும் உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு மீட்பது குறித்து வழக்கு தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தார். மேலும் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றது என்று செய்தியாளரிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.