கிரிக்கெட்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணி இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி முடித்தவுடன் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பதிவு செய்துள்ளது.
இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தாலும் வந்து வீழ்ச்சி என்பது சொல்கிற அளவுக்கு இல்லை என்பதே உண்மை. உம்ரா மட்டும்தான் நன்றாக பந்துவீசி முதலில் லிங்கில் விக்கெட்டை வீழ்த்தினார் ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. 44 ஓவர்கள் பும்ரா வீசி உள்ளார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் ஜடேஜா மற்றும் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி அணில் இடம்பெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உம்ரா கலந்து கொள்ளாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் மாற்று வீரர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.