உடம்பில் உள்ள அனைத்து பாகங்களும் எலும்பு, நரம்பு சதை ஆகியவற்றை கொண்டு பின்னிப்பிணைந்து உள்ளது. ஏதேனும் ஒரு பாகத்தில் சிறு மாற்றம் என்றாலும் அவை வேறு இடத்தில் உள்ள உறுப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த பதிவில் சிறுநீரக புற்றுநோய் குறித்தும், அதன் அறிகுறிகள் அதன் பக்க விளைவுகள் ஆகியவற்றை பற்றி விரிவாக காணலாம். பெரும்பாலும் சிறுநீரகங்களில் உள்ள செல்களில் ஏற்படும் பிரச்சனை காரணமாகவே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுகிறது.
இந்தப் புற்றுநோய் தாக்கல் பட்டியலில், உலகளவில் 14 வது இடத்தைப் பிடித்துள்ளது. இது பெரும்பாலும் ஆண்களை தாக்கக்கூடியதும், வயதானவர்களை தாக்கக்கூடியதும் ஆக உள்ளது. சிறுநீரக புற்றுநோய் செல்கள் கழுத்துப் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகளை தாக்கி வீக்கத்தை உண்டு செய்யும். இது அரிதாக ஏற்படும். யூரினில் ரத்த கசிவு, சிறுநீரக கட்டி, உடல் சோர்வு, எடை இழப்பு, எலும்பு வலி, உயர் ரத்த அழுத்தம், பக்கவாட்டு பகுதி வலி, பசியற்ற தன்மை ஆகியவை சிறுநீரக புற்று நோய்க்கு அறிகுறிகளாக உள்ளன. நமது உடம்பில் பெரும்பான்மையான வேலைகளை சிறுநீரகம் செய்வதனால் இந்த நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.