கே எல் ராகுல்-அதியாஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை!! டெல்லி அணி கொடுத்த சர்ப்ரைஸ்!!

KL Rahul-Adhiya Shetty couple welcomes baby girl

கிரிக்கெட்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுள் ஒருவரான கே எல் ராகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது அதிகாரப்பூர்வமாக அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போதைய வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லி மற்றும் லக்னோ இரு அணிகள் மோதியது. இந்த அணியின் பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால் கே எல் ராகுல் vs லக்னோ அணி. லக்னோ அணியின் கேப்டனாக இருந்தவர் கே எல் ராகுல் கடந்த ஆண்டு அவர் ஒரு போட்டியின் தோல்வியின் போது மைதானத்தில் லக்னோ அனியின் உரிமையாளர் கே எல் ராகுலை காட்டமாக பேசியது இணையத்தில் வைரலானது.

அதன்பின் அவர் அணியை விட்டு வெளியேறி ஏலத்திற்கு வந்தார் அவர் தற்போது டெல்லி அணியில் விளையாட இருந்த நிலையில் முதல் போட்டியாக லக்னோ அணியுடன் மோத இருந்தது. இதனால் இந்த போட்டியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் போட்டியில் கேஎல் ராகுல் கலந்து கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் எக்ஸ பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தார்.

இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக டெல்லி அணி வீரர்கள் அனைவரும் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் குழந்தையை கையில் வைத்து தாலாட்டுவது போல நடனமாடி அனைத்து வீரர்களும் அந்த நடனத்தை ஆடுவது போல வீடியோ ஒன்றை பதிவு செய்து அவருக்காக வெளியிட்டுள்ளது டெல்லி அணி நிர்வாகம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram