Cricket: நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கே எல் ராகுல் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரு போட்டிகளில் முதல் போட்டியாக டெல்லி மற்றும் சென்னை இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது இதில் டெல்லிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இதில் தொடக்க வீரராக கே எல் ராகுல் மற்றும் பிரேசர் மெக்கர்க் களமிறங்கினர். டெல்லி அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் கே எல் ராகுல் கலந்து கொள்ளவில்லை இரண்டாவது போட்டியில் நான்காவதாக களமிறங்கி 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
டெல்லி அணி ரசிகர்களை பொறுத்தவரை அதிகபட்சமான எதிர்பார்ப்பு கே எல் ராகுல் மீது தான் இருக்கிறது. அவர் எப்போது பெரிய பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில் சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்களை விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்து நடையில் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.இதன் மூலம் 20 ஓவர்களில் டெல்லி அணி 183 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவதாக சென்னை அணி களம் இறங்கி இலக்கை எட்ட முடியாமல் திணறின. தொடக்கத்தில் களமிறங்கும் அதிரடி வீரர்கள் வெகுவாக ஆட்டமிழக்க விஜய் சங்கர் மற்றும் தோனி இருவரும் பெரிய ஷாட்டுகள் ஏதும் ஆடாமல் மெதுவாக ஆடி இலக்கை எட்ட முடியாமல் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை கே எல் ராகுல் தட்டிச் சென்றார்.