Cricket: இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி செய்த செயல் கே எல் ராகுலை வருத்தம் அடைய செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் மைதானத்தில் விராட் கோலி செய்தது கே எல் ராகுலை வருத்தம் அடைய வைத்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கி விளையாடியது இதில் 264 ரன்கள் அடித்து 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து களமிறங்கி விளையாடி வந்து இந்திய அணி முக்கிய வீரர்கள் குறைவான ரன்கள் ஆட்டம் இழந்த போதும் விராட் கோலி மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் இணை சிறப்பாக விளையாடி 150 ரன்களுக்கு மேல் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழந்தார். அதன்பின் களமிறங்கிய அக்சர்பட்டில் 27 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஆனால் கோழி நிதானமாக விளையாடி 70 ரன்களுக்கு மேல் விளையாடி வந்த நிலையில் கே எல் ராகுல் களமிறங்கினார். கே எல் ராகுல் சிக்சர் பவுண்டரி என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் விராட் கோலி நிதானமாக ஆடுவார் என கே எல் ராகுல் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் விராட் கோலி சதத்தை நெருங்கும் போது சாம்பா வீசிய பந்தில் பெரிய சாட் அடிக்க முயற்சி செய்து விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் கே எல் ராகுல் வருத்தமாக நான் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்கும் போது நீங்கள் சதத்தை பூர்த்தி செய்யாமல் ஏன் இப்படி செய்தீர்கள் என கூறும் வகையில் மைதானத்தில் பேசினார். தற்போது அது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





