Cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் கே எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. என்னதான் முதல் போட்டியில் இந்திய அணியில் 5 சதங்கள் அடித்தாலும் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை அதுவும் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு தான் இந்திய அணியின் தோல்வி காரணம் என பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் மூன்று புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி என மூன்று புதிய வீரர்களை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பௌலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஜெயஸ்வால் இருவரும் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் கே எல் ராகுல் இரண்டு ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வெளியேறினார்.