அவர்கள் இல்லாதது பெரிய குறைபாடாக இருக்கிறது!! ரோகித் கோலி குறித்து உருக்கமாக பேசிய கே எல் ராகுல்!!

KL Rahul spoke passionately about Rohit Kohli

கிரிக்கெட் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் இன்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் ரோகித் மற்றும் விராட் கோலி குறித்து கே எல் ராகுல் உருக்கமாக பேசியுள்ளார்.

இந்திய அணி 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விளையாடி முடித்த பின் உடனடியாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது இன்று மதியம் 3:30 மணியளவில் தொடங்க உள்ளது. மேலும் இந்திய அணி இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 18 ஆண்டுகள் ஆகிறது.

இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் மற்றும் புதிய வீரர்கள் உள்ளடக்கிய இளம் வீரர்கள் படையோடு கலமிறங்குகிறது. மேலும் இதுகுறித்து பேசிய இந்திய அணியில் முக்கிய வீரரான கே எல் ராகுல் பேசுகையில், என்னுடைய டெஸ்ட் போட்டி கரியரில் இதுவரை விராட் மற்றும் ரோகித் இல்லாத அணியில் இருந்ததில்லை, அவர்கள் அணியில் இல்லாதது மிகப்பெரிய குறைபாடாக தான் தெரிகிறது.

இருந்தாலும் அவர்களுடைய முடிவை நான் மதிக்கிறேன் அனைவரும் மதிக்க வேண்டும். அவர்கள் அணிக்காக இதுவரை அவர்களால் முடிந்த அனைத்தும் கொடுத்து லெஜென்ட்ஸ் ஆக மாறி இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். புதிய வீரர்கள் உள்ளடங்கிய அணியில் கே எல் ராகுல் சற்று அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படுகிறது. அவரின் ஆட்டம் மிக முக்கியமானதாக இருக்கும் என ரசிகர்களிடையே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram