மகிழ்ச்சியில் கே எல் ராகுல் செய்த செயல்!! கலாய்த்து சிரித்த சக வீரர்கள்!!

KL Rahul's act of happiness

Cricket: சாம்பியன் டிராபித்துடன் கோப்பை வென்ற பின் கேஎல் ராகுல் செய்து செயலை கண்டு மற்ற இந்திய வீரர்கள் நகைச்சுடன் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் 12 வருடங்களுக்குப் பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இதன் வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களும் இதனை பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

கோப்பை வென்ற பின் பல நிகழ்ச்சியானும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தன அதில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கோப்பை வென்ற பின் குழந்தை போல் நடனமாடியது இணையத்தில் வைரலாகியது. அதனைத் தொடர்ந்து விராட் கோலி கோப்பை வென்ற பின் முகமது சமியின் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் கடைசியாக பேட்டிங் பிடித்து கோப்பையை வென்ற பின் தனது பேடிணை கழட்டாமல் அப்படியே சென்று கோட் அணிந்து கோப்பையை வாங்க சென்றது நகைச்சுவை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட விராட் கோலி ரிஷப் பண்ட ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் சக வீரர்களும் கலாய்த்து சிரித்துக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram