Cricket: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் வெளுத்து வாங்கிய விராட் கோலி.
துபாயில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய களம் இறங்கியது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் அடித்தது இதில் அதிகபட்சமாக ஸ்மித் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 61 ரன்களும் டிராவிட் 39 ரன்களும் அடித்து இருந்தனர். அதேபோல் இந்திய அணியில் சாமி மூன்று விக்கெட்டுகளும் வருண் மற்றும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர் இதில் ரோகித் சர்மா பரபரப்பாக ஆட்டத்தை தொடங்கினார் மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கில் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி ஆஸ்திரேலியா அணி பவுலர்களை திணறு செய்தார் 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 84 ரன்கள் அடித்தார்.
விக்கெட் இழந்து ஆடிவரும் இந்திய அணியில் விராட் கோலி நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தார் இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். சாம்பார் பேசிய பந்தில் பெரிய ஷார்ட் அடிக்க முயற்சி செய்து விராட் கோலி விக்கெட் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆனால் ரசிகர்கள் சதம் அடிக்க முடியாமல் போனது வருத்தமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்பின் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா அபார ஆட்டத்தால் இந்திய அணி 48.1 ஓவரில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறி உள்ளது.





