நரைன் சுழலில் சிக்கிய டெல்லி!! கொல்கத்தா அணி அபார வெற்றி!!

Kolkata team wins a huge victory

cricket: நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி. பந்து வீச்சினை எதிர் கொள்ள முடியாமல் டெல்லி அணி தோல்வி.

நடைபெற்று வரும் ipl தொடரில் நேற்று கொல்கத்தா மற்றும் டெல்லி இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.  இந்த போட்டியில் முதலில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் களமிறங்கிய  நிலையில் தொடக்க வீரர்கள் முதல் அணைத்து வீரர்களும் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க ஆனால் அவர்கள் குறைவான பந்துகளில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் கொல்கத்தா வீரர்கள்.

இதில் ரகுவன்ஷி அதிகபட்சமாக 44 ரன்களும், ரிங்கு சிங் 36 ரன்களும் எடுத்திருந்தனர். டெல்லி அணியில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், விப்ராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 20 ஓவர் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 204 எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. டெல்லி அணியின் தொடக்க வீரர் டூ பிளசிஸ் நிதானமாக விளையாடினார்.

தொடர்ந்து முக்கிய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க அதிரடி வீரரான கே எல் ராகுல் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்த ஆட்ட இழப்பு ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தது. எனவே கொல்கத்தா அணி இறுதிவரை சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தியது. சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம்  14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram