Cricket: கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இடையிலான நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் கலம் இறங்க ராஜஸ்தானி ஆரம்ப முதலே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அவர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த ராஜஸ்தான் வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் பராக் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோரல் போராடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவு பெற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 151 என இலக்கு நிர்ணயித்தது.
இரண்டாவதாக கலந்து இறங்கிய கொல்கத்தா அணி நிதானமாக விளையாடி இலக்கை எட்டியது. இதன் மூலம் ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. ராஜஸ்தானி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் தோல்வியடைந்து வெற்றி காண முடியாமல் திணறி வருகிறது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ இரு தங்களுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது.