உண்மையாவே நீ கடப்பாரதான்யா!! கதி கலங்கிய கொல்கத்தா!! SRH அபார வெற்றி!!

Kolkata upset!! SRH win by a huge margin

cricket: நேற்று இரண்டாவது போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தது.

நடைபெற்று வரும் ஐ பி எல் தொடரில் லீக் போட்டிகள் முடித்து அரையிறுதி போட்டியை நெருங்கிகொண்டிருக்கும் நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் இரு அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்  இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா நிதானமாக போட்டியை தொடங்கினாலும், டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனை ஹெட் 76 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் அதிரடி ஆட்ட்டத்தை வெளிபடுத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 105 ரன்கள் குவித்து சதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் 9  சிக்ஸர்கள் அடங்கும்.  20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் அடித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறிய நிலையில் 18.4 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 110 ரன்களில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக உணத்கட், இஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram