தணிக்கைச் சான்றிதழ் தரலன்னா?? பின்விளைவு மோசமா இருக்கும்!! விஜய் படத்திற்காகத் எச்சரித்த கே.எஸ். அழகிரி!!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தாமதப்படுத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் படத்தைத் தடுத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் மத்திய அரசுக்கும் தணிக்கை வாரியத்திற்கும் கே.எஸ். அழகிரி பகிரங்க எச்சரிக்கை

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan), வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் நீடித்து வரும் தாமதம் தமழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

KS அழகிரியின் அதிரடி அறிக்கை: இது குறித்துத் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், “ஒரு கலைஞனின் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் அதிகாரத்தை யாரிடமும் மக்கள் கொடுக்கவில்லை. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்றே தாமதிப்பது கண்டனத்திற்குரியது. இது ஒரு தனிநபருக்கு எதிரான நடவடிக்கை அல்ல, ஜனநாயகத்திற்கே எதிரான நடவடிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

பின்விளைவுகள் ஏற்படும்: தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் படத்தைத் தடுக்க நினைத்தால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். ரசிகர்கள் மற்றும் மக்களின் கொந்தளிப்புக்குத் தணிக்கை வாரியம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உடனடியாகச் சான்றிதழ் வழங்கி, படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதை உறுதி செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

ஏன் இந்தத் தாமதம்? எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஒரு அரசியல் த்ரில்லர் (Political Action Thriller). படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள் மற்றும் சமூகக் கருத்துக்கள் காரணமாகவே தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடுவதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது, ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘வெயிட்டேஜ்’ கொடுத்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram