ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் பத்தாவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது தொடர் குரோசியாவில் நடக்கவிருக்கிறது. உலகச் சாம்பியன் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ், கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் போட்டியில் பங்கு பெறுகின்றனர். ரேபிட் முறையில் போட்டி நடக்க இருக்கும்.
முதல் நாளில் மூன்று சுற்றுகள் நடைபெற்ற நிலையில் முதல் சுற்றில் முகேஷ் மற்றும் போலந்து ஜான் டுடாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. சுதாரித்து விளையாடிய குகேஷ் அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரேஷாவை வெற்றி கொண்டார்.
மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் மோதினர். ஆட்டத்தின் போது கருப்பு நிற காய்களுடன் களம் இறங்கிய குகேஷ் தனது 38-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.
முதல் மூன்று சுற்றில் முடிவில் கார்ல்சன் 4.0, அமெரிக்காவின் வெஸ்லி 4.0, ஜான் டுடா 4.0 மற்றும் குகேஷ் 4.0 என புள்ளிகளை கொண்டு டாப் 4 இடங்களை பிடித்துள்ளனர். முதல் சுற்றில் டிரா செய்த பிரக் ஞானந்தா (2.0) புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.