தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு சீசன் ஆரம்பித்த காரணத்தினால் மக்கள் கூட்டம் நாள்தோறும் அடையாளமாக வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த இடம் முழுவதும் மழை பெய்யும் காலங்களில் அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக இங்கு சுற்றுலா பயணிகள் அலை அலையாக வருவர். குற்றாலம் என்ற காரணத்திற்கு பொருள் குறு ஆல் என்கின்ற ஆலமரம் அதிகமாக அப்பகுதியில் காணப்படுவதும், குற்றாலநாதர் கோயில் காரணத்தினாலும் குற்றாலம் என்று சொல்லப்பட்டு வருகின்றது. திருக்குற்றாலக் குறவஞ்சி என்கின்ற சங்க இலக்கிய நூல் சிற்றிலக்கியங்களில் பெயர் போனதாக சிறப்பு உடையது. ஆதி காலங்களில் இந்த இடத்தை தேனூர் என்று அழைக்கப்பட்டதாக ஒரு ஒப்புக்கொண்டப்பட்ட தகவல் உள்ளது.
இங்கு மெயின் பால்ஸ், ஐந்தருவி, சிற்றருவி மேலும் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்ட எண்ணற்ற அருவிகள் உள்ளன. இங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்து உறவினர்களோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து சமைத்து குளித்து வந்தால் உடலில் உஷ்ணம் குறையும். மனதின் பாரமும் நீங்கும். இதன் காரணமாகவே அங்கே ஜூன் ஜூலை மாதங்களில் அதிகமாக மக்கள் கூட்டம் திரளுவார்கள். ஆனால் தற்போது (ஜூன் 24) குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்க தடை விதித்து உள்ளனர். எனவே நீங்கள் செல்ல பிளான் செய்கிறீர்கள் என்றால் தங்குமிடம் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொண்டு பிளான் செய்யுங்கள் என்கின்றனர் முன் அனுபவம் உள்ளவர்கள். நீர் வரத்து அதிகமாக இருந்தால் சில நேரம் சிறு சிறு பாறைகள் உண்டோடி விழுகும். மேலும் மக்கள் நீரில் அடித்துச் செல்ல பெருவாய்ப்புண்டு என்ற காரணத்தினால் குளிக்க அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப அங்கு தடை விதித்து விடுவார்கள்.