ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை பகுதியில் இந்து மத கடவுள் சிவன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பனி சூழ்ந்த இமயமலையில் இயற்கையாக உருவாகிய பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரை சென்று வருவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை மூன்றாம் தேதி தொடங்கியது.
யாத்திரை தொடங்கிய மூன்றாம் தேதி முதல் நாள்தோறும் ஆயிர கணக்கில் பக்தர்கள் பனி லிங்கத்தை காண வந்து செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான தற்போதைய கணக்கெடுப்பின்படி யாத்திரை தொடங்கியது முதல் தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் யாத்திரிகர்கள் இயற்கையாக உருவான பனி லிங்கத்தை தரிசிக்க வந்து சென்றுள்ளதாக நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் மட்டும் 2,324 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய வந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பனி லிங்கத்தை தரிசிக்க மேலும் அதிக அளவில் யாத்திரிகர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையில் லட்சம் யாத்திரிகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டில் தொடங்கிய சில நாட்களிலேயே மூன்று லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றது கடந்த ஆண்டு யாத்திரிகர்கள் முக்கால் பகுதியாகும். அமர்நாத் யாத்திரையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.