கடந்த சில வருடங்களாகவே இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அப்படிப்பினை ஸ்காலர்ஷிப்பில் படிக்க இயலும். அதன்படி இந்த வருடத்திற்கான நீட் தேர்வானது, தேசியத் தேர்வு முகமை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7 என்று பகிர்ந்துள்ளது. எனவே மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் மாணவ, மாணவியர்கள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வானது மே நான்காம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முறை பல மாணவர்களுக்கும் பல நெருக்கடிகளையும் தந்துள்ளது. சில மாணவர்கள் இதன் அதீத மன அழுத்தத்தினால் மரணம் கூட அடைந்து உள்ளனர். சிலர் இத்தேர்வினில் தேர்ச்சியுற முடியவில்லை எனினும், தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நவீன காலங்களில் இந்தப் படிப்பை விரும்பும் மாணவர்கள், தாங்கள் சம்பாதித்து தான் தங்கள் குடும்பங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்தப் படிப்புகளை படித்து முடிப்பதற்கே 5 வருடங்கள் ஆகும். அதற்கு மேல் ட்ரைனிங் டாக்டராக பணியை தொடங்கி, ஃபீல்டில் தனித்துவமாக நிற்க மேற்கொண்டு படிப்பு படிக்க நேரிடும்.
மாணவர்கள் இந்த பீல்டை படிக்க தேர்வு செய்யும் முன்னர், குடும்ப சூழ்நிலையை கணக்கில் வைத்து தேர்வு செய்யுமாறு பலரும் பரிந்துரைக்கின்றனர். இது மே மாதத்தில் இதற்கான தேர்வு வழக்கமாக நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் இதற்கான முயற்சியில் மாணவர்கள் ஈடுபட ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.