ரேஷன் கார்டு என்பது தமிழ்நாட்டின் மிக முக்கிய அங்கமாக பல குடும்பங்களில் அடிப்படை வாழ்வியலாக செயல்பட்டு வருகின்றது. மேலும், குடும்பங்களின் ஒரு முக்கிய ஆதாரமாகவே இது செயல்பட்டு வருகிறது. இதன் இ கே ஒய் சி சரி பார்த்தலை மத்திய அரசு தற்சமயம் கட்டாயமாக்கி உள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் இந்த சரிபார்த்தலை முடிக்காவிட்டால், ரேஷன் கார்டுகள் பறிபோகிவிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதனை செயல்படுத்த பெரும் சவாலாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் 72 லட்சம் நபர்களுக்கு மேல் இ கே ஒய் சி செயல்பாட்டுகளை கடைப்பிடிக்கவில்லை என்று ஒரு கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் சென்டர் மூலமாகவும் இதனை கம்ப்ளீட் செய்யலாம். அல்லது ஸ்மார்ட்போனின் மூலமாகவும் முடித்துக் கொள்ளலாம்.
தமிழக மாநிலத்தின் உணவுத்துறை மற்றும் ரேஷன் கார்டு சேவையின் இணையதளத்திற்குள் நுழைந்து கொள்ளவும். அந்த இணையதளத்தில் இகேஒய்சி சரி பார்த்தலை தேர்ந்தெடுக்கவும். உங்கள் அட்டை எண்ணை கொடுத்து உள்நுழையவும். ரேஷன் கார்டுடன் இணைத்து இருந்த மொபைல் நம்பருக்கு otp வந்து அடையும். அதனை அந்த தளத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். தற்சமயம் ஆதார் எண்ணை ரேஷன் அட்டை எண்ணுடன் இணைத்துக் கொள்ளவும். உங்கள் ரேஷன் அட்டை விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி செய்துவிட்டு கைரேகை அல்லது ஓடிபி மூலம் நிறைவு செய்யவும். இதை செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகலாம். இதனை முடிக்காத பட்சத்தில், ரேஷன் கார்டு நீக்கப்படும் அபாயம் உள்ளது என்று பதிவிட்டுள்ளது. இதன் கடைசி தேதியாக மார்ச் 31 என்று தகவல் வெளியிட்டுள்ளது.