காஞ்சிபுரம் மாநகர அதிமுக தெற்கு பகுதி கழகம், 47 வது வார்டு, 50 வது வார்டு போன்றவற்றில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டம் மற்றும் பூத் கமிட்டியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் திமுக அரசு குறித்தும் இவர்களுடைய ஆட்சி காலத்தில் நிகழக்கூடிய சட்ட ஒழுங்கு குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் விவரித்து இருக்கிறார்.
பூத் கமிட்டி முடிந்த பின்ப செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் வைகை செல்வன் கூறி இருப்பதாவது :-
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் சட்ட ஒழுங்கானது கேலி கூத்தாக இருக்கிறது என்றும் தமிழகத்தில் உள்ள காவல்துறையினர் என்னதான் செய்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பு இருக்கிறார். சமீபத்தில் ஈரோடு நெடுஞ்சாலைகள் வைத்து கிச்சுப்பாளையம் ரவுடியான ஜான் என்பவரை அவருடைய மனைவியின் கண் முன்னே 5 பேர் கொண்ட குழு பட்டப் பகலில் கொலை செய்தது. இதை சுட்டிக் காட்டிய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ரோந்து பணியில் இருக்கக்கூடிய காவல் துறையினர் எங்கு சென்றனர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என சரமாரியாக கேள்விகளை தொடுத்தார்.
அதன் பின்பு டாஸ்மார்க் ஊழலில் 1000 கோடி எங்கே சென்றது என்றும் இதற்கான இடைக்கால தடையை ஏன் மாநில அரசு கோரியிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். டெல்லி சதீஷ்கர் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் டாஸ்மார்க் ஊழலுக்காக சிறை சென்றுள்ளன என்றும் அந்த வரிசையில் இப்பொழுது நான்காவது இடத்தில் தமிழகம் சிறை செல்ல தயாராக உள்ளது என்றும் விமர்சித்திருக்கிறார். சட்டம் ஒழுங்கு ஆனது நாளுக்கு நாள் சரிந்து வருவதாகவும் இதனை அதிமுகவினர் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்ததோடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் டாஸ்மார்க் ஊழலுக்காக சிறை செல்லக்கூடிய நிலை உருவாகலாம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.