தி நியூயார்க் டைம்ஸ் மீது நஷ்ட ஈடு!! அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் ட்ரம்ப்!! 

Lawsuit against The New York Times
நியூயார்க்: கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றியடைந்து அதை தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். பதவிக்கு வந்த நிலையில் “அமெரிக்காவின் பொற்காலம் மீட்டெடுக்கப்படும்” எனக் கூறி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை மற்றும் 4 நிருபர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரம்புக்கு எதிராக உள்நோக்கத்துடன் அவருக்கு எதிராக பல்வேறு கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர்கள் இரண்டு பேர் எழுதிய புத்தகங்கள் அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரைகள் பல ஆண்டுகளாக எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் நிறைவு பெறும் வரை கட்டுரைகள் வெளியானதாக தெரிவிக்கின்றன.
கட்டுரைகளில் பொய்மை தன்மை அதிகமாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் இதனை பதிவிட்டுள்ளார். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்பி வருவதாகவும், இடதுசாரி ஜனநாயக கட்சி அதற்கு ஊதுகுழலாக உருமாறி உள்ளது என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராக ரூ 1.32 லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்கும் படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதுகுறித்து தி நியூ ஆர்க் டைம் பத்திரிக்கை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் மீது கடந்த ஆண்டுகளில் ரூ. 88,000 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram