ஆறுபடை வீடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு. ஆறு என்ற எண்ணிற்கும் முருகப்பெருமானின் பிறப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதுபோல சபரிமலையின் நாயகனான ஐயப்ப சாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு இங்கே படிக்க தெரிந்து கொள்ளுங்கள்.
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே அதில் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் முருகனும் ஐயப்பனும் இருப்பது தான் நியதி.
பொதுவாக ஆறு படை வீடு என்று சொன்னாலே நம்முடைய நினைவுக்கு வருவது கடவுள் முருகன் தான். அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு. அவருடைய பிறப்புக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆனால் முருகனுக்கு மட்டுமல்ல, சபரிமலையின் நாயகனான ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
தெரியாதவர்கள் இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஏன் கார்திகைக்கு மட்டும் இந்த சிறப்பு என்றால் கார்த்திகேயன் ஆகிய முருகனும் ஐயப்பனும் இருவரும் பிறந்த மாதம் இந்த கார்த்திகை மாதம் தான். அதனால்தான் தென்னிந்தியாவில் மற்ற மாதங்களுக்கு இல்லாத சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த மாதத்தின் மிகச்சிறந்த சிறப்பே கார்த்திகை தீபமும் சபரிமலை ஐயப்ப சாமிக்கு ஏற்றப்படும் மகர ஜோதியும் தான்.
ஐயப்ப சாமியை தர்மசாஸ்தா என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றன. இவரைப் பார்க்க செல்வதை ஆண்ட தோறும் கார்த்திகை மாதத்திற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள் பக்தர்கள். அதுபோல் ஐயப்ப சுவாமிக்கு ஆறுபடை வீடுகள் உண்டு அங்கும் நீங்கள் சென்று வரலாம் ஐயப்ப சுவாமியின் முழு அனுகிரகமும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும் அந்த ஆறுபடை வீடுகள் இதோ உங்களுக்காக
*ஆரியங்காவு
*அச்சன் கோவில்
*குளத்துப்புழா
*எரிமேலி
*பந்தளம்
*சபரிமலை