சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் சென்னை மற்றும் ஒன்பது மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்து காணப்படும் வெப்பநிலை :
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது. மேலும், சென்னையில் மட்டும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஒரு நாளின் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஐ விட அதிகரிக்கவில்லை. எனவே கடந்த ஆண்டுகளை விட வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழலை நிலவி வருகிறது.

கடந்த வாரங்களில் வானிலை :
மே 31 லிருந்து ஜூன் 1ம் தேதி வரை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருந்தது. அதற்குப் பின்னால் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து குளிர்ச்சியை நிலவி உள்ளது.

மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், தென்காசி, கோவை, தேனி, நீலகிரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளுக்கும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.