இ எம் ஐ யில் கடன் பெற்றவர்கள் தங்களுடைய கடனை குறிப்பிட்ட காலத்திற்கு வகுப்பு அதற்கேற்றவாறு பணம் செலுத்தி வருவது வழக்கமான ஒன்று. சில நேரங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் பொழுது கடன் கொடுத்த நிறுவனங்கள் கடன் பெற்றவர்களை கேட்காமல் இல்லை அவர்களுடைய இஎம்ஐ களைத்து விடுகின்றன.
இதனால் கடன் கட்டுபவர்கள் தங்களுடைய கடன் சுமைகள் காரணமாக சில தேவையற்ற முடிவுகளை எடுப்பதோடு சிக்கல்களில் மாட்டிக்கொள்வதாகவும் இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது சில முக்கிய மற்றும் புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது போல EMI அதிகரிக்க வேண்டும் என்றால் கட்டாயமாக கடன் பெற்றவரின் ஒப்புதல் இருக்க வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
கடன் காலத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் கடன் பெற்றவரிடம் கட்டாயம் அதனை தெரிவிக்க வேண்டும் என்றும் அவருடைய ஒப்புதலின் பெயரில்தான் கடன்காலம் ஆனது நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்த தெளிவு தன்மையை கடன் பெற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கடன் வட்டி விகிதங்கள் குறித்த முழுவிபரங்களும் தெரியப்படுத்துதல் வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒருவருக்கு கடன் வழங்குவதற்கு முன்பாக அவருடைய கடன் தொகை விவரங்கள் மற்றும் அதற்கான வட்டி விகிதங்கள் குறித்த உண்மை அறிக்கையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதனை தவறும் பட்சத்தில் அதற்கான தண்டனை வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.