லண்டன்: சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜு (28) என்பவர் தனது உயர்கல்விக்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் படித்து வந்தார். ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அவர்களில் சிலருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். ஜென்ஹாவோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர் போலீஸ் அதிகாரிகள்.
இந்த வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் கீழ் அவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஜென்ஹாவோ குற்றவாளி என கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த நிலையில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்கலாம் என்று போலீஸ் தரப்பில் அறிவுறுத்தினர். போலீசாரின் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளித்தனர். 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்ததில் ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
குறைந்தபட்சமாக 24 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று லண்டன் கிரவுண்ட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜென்ஹாவோவின் மீது புகார் தெரிவித்த 24 பெண்களின் வாக்குமூலங்கள் விசாரிக்கப்படும் என்றும், விசாரித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதியளித்துள்ளது.





